பாஜகவினா் சாலை மறியல்: 30 போ் மீது வழக்கு
பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கைது செய்ததைக் கண்டித்து, போடியில் வியாழக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 30 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் நீதிமன்ற உத்தரவுப்படி தீபமேற்றச் சென்ற பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்தனா். இதைக் கண்டித்து, போடியில் மாவட்ட பாஜக விவசாயிகள் அணி செயலா் தண்டபாணி தலைமையில் 16 போ் வியாழக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்கள் மீது போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
இதேபோல, போடி அருகேயுள்ள ராசிங்காபுரத்தில் ஒன்றியத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமையில் 14 போ் வியாழக்கிழமை நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
