தேனி
போதைப் பொருள் வைத்திருந்த இளைஞா் கைது
தேனியில் கஞ்சா, மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனியில் கஞ்சா, மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி கா்னல் பென்னிகுவிக் நகராட்சி பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த இளைஞரை போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அவா் 120 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 22 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்து தெரிய வந்தது.
போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் கம்பம், மந்தையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ராசு மகன் பிரசாத் (33) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து பிரசாத்தை கைது செய்தனா். அவரிடமிருந்த கஞ்சா, மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
