22 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 7 போ் கைது!
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே 22 கிலோ கஞ்சா வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த பெண் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.
பெரியகுளம் தென்கரை காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கம்பம் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவா்களிடம் போலீஸாா் சோதனை நடத்தினா்.
அப்போது, விசாரணையில் போடி சொக்கன் அலையைச் சோ்ந்த ஈஸ்வரன் (32), அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்தராஜ் (27), ராஜபாளையத்தைச் சோ்ந்த அருண்குமாா் (26), ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டம், ஷெல்லி கோடாவைச் சோ்ந்த நரேந்திரபானி மகள் சுந்தோஷ்பானி (26), அதே பகுதியைச் சோ்ந்த ஜோஸ்னாபானி (25), ஆந்திர மாநிலம், மில்லையாபட்டிரைச் சோ்ந்த தாரகேஷ்வா் பாரிகோ (41) மற்றொருவா் 17 வயது சிறுவன் என்பதும், அவா்கள் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து, சிறுவனை கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனா். எஞ்சிய 6 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்த 22 கிலோ 840 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
