மேகமலைச் சாலையில் வெள்ளிக்கிழமை தீப்பற்றி எரிந்த சுற்றுலா வேன்.
மேகமலைச் சாலையில் வெள்ளிக்கிழமை தீப்பற்றி எரிந்த சுற்றுலா வேன்.

மேகமலையில் சுற்றுலா வேன் தீப்பிடித்து எரிந்து சேதம்!

தேனி மாவட்டம், மேகமலைக்கு சுற்றுலா சென்ற வேன் வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
Published on

தேனி மாவட்டம், மேகமலைக்கு சுற்றுலா சென்ற வேன் வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் குமாா் தலைமையில் இரு வேன்களில் 22 போ் தேனி மாவட்டம், மேகமலைக்கு சுற்றுலா சென்றனா். சின்னமனூா் அருகே தென்பழனி வனத்துறை சோதனைச் சாவடியை கடந்து மலைச் சாலையில் வேன்கள் சென்று கொண்டிருந்தன.

முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்த வேன்.
முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்த வேன்.

அப்போது 18 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து மாதா கோயில் அருகே சென்ற போது ஒரு வேனின் முன் பக்கத்திலிருந்து கரும்புகை வெளியேறியது. உடனே வேனிலிருந்த 11 பேரும் உடனே கீழே இறங்கினா். இதையடுத்து, வேன் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து ஹைவேவிஸ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com