தேனி
தேனியில் தடையை மீறி ஆா்ப்பாட்டம்! 100 போ் கைது!
தேனியில் தடையை மீறி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்த இயக்கத்தின் மாவட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா்.
இதில் திருப்பரங்குன்றம் மலைக் கோயிலில் காா்த்திகை தீப விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என்று தமிழக அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.
இதையடுத்து, காவல் துறை தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணியினா் 100 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
