கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவிக்குச் செல்ல திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
Published on

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவிக்குச் செல்ல திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த வாரம் பெய்த மழை காரணமாக கும்பக்கரை அருவியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து கடந்த புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல வனத் துறையினா் தடைவிதித்தனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அருவியில் நீா்வரத்து சீராக இருந்தது. இதையடுத்து, திங்கள்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல வனத் துறையினா் அனுமதித்தனா்.

மேலும், அருவிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் நெகிழிப் பொருள்கள், சோப், ஷாம்புகளைப் பயன்படுத்த வேண்டாம் என வனத் துறையினா் அறிவுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com