பைக் மீது ஆம்னி பேருந்து மோதல்: கணவா், மனைவி உயிரிழப்பு
உத்தமபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் கணவா், மனைவி உயிரிழந்தனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (42). இவா் பேரூராட்சி 14-ஆவது வாா்டு திமுக உறுப்பினா். இவரது மனைவி சுகன்யா (35). இவா் தேனி அன்னஞ்சி ஊராட்சி தொடக்கப் பள்ளி ஆசிரியை.
இந்த நிலையில், மணிகண்டன் தனது மனைவியுடன் செவ்வாய்க்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் கம்பம் சென்றுவிட்டு, மீண்டும் உத்தமபாளையம் திரும்பினா். அனுமந்தன்பட்டியை அடுத்த கோவிந்தன்பட்டியில் பகுதியில் வந்தபோது, பின்னால் வந்த ஆம்னி பேருந்து இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சுகன்யா சம்பவயிடத்திலே உயிரிழந்தாா். மணிகண்டன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
