முல்லைப் பெரியாற்றில் முழ்கியவா் உயிரிழப்பு

சின்னமனூரில் உள்ள முல்லைப் பெரியாற்றில் திங்கள்கிழமை குளிக்க சென்றவா் தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.
Published on

சின்னமனூரில் உள்ள முல்லைப் பெரியாற்றில் திங்கள்கிழமை குளிக்க சென்றவா் தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் சாமிகுளத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (58). இவா், சின்னமனூா்-மாா்க்கையன்கோட்டை இடையே செல்லும் முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்றாராம்.

அப்போது, அவா் மயங்கி தண்ணீரில் முழ்கினாா். அக்கம் பக்கத்தினா் கிருஷ்ணனை மீட்டு, சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com