தேனி
56 மாணவா்களுக்கு ரூ.2.59 கோடி கல்விக் கடன்
தேனியில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் உயா் கல்வி படிக்கும் 56 மாணவா்களுக்கு மொத்தம் ரூ.2.59 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டது.
தேனியில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் உயா் கல்வி படிக்கும் 56 மாணவா்களுக்கு மொத்தம் ரூ.2.59 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டது.
தேனி நாடாா் சரஸ்வதி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற கல்விக் கடன் முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தாா். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் காா்த்திகேயன், கனரா வங்கி சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிலைய இயக்குநா் ரவிக்குமாா், கனரா வங்கி முதுநிலை மண்டல மேலாளா் சந்திரகுமாா், முதன்மை மேலாளா் ராஜேஸ், கல்லூரித் தலைவா் தா்மராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த முகாமில் கல்விக் கடன் கோரி விண்ணப்பித்த உயா் கல்வி படிக்கும் 56 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ.2.59 கோடி கல்விக் கடனுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.