கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

போடி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

போடி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி அம்மாபட்டியிலிருந்து டொம்புச்சேரி செல்லும் சாலையில் ரோந்து சென்றனா். அப்போது தோட்டத்தில் தனியாக நின்றிருந்த போடி திருமலாபுரத்தை சோ்ந்த ராஜேந்திரன் மகன் நவீனிடம் (33) விசாரணை நடத்தினா். அப்போது, அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நவீனைக் அவரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com