போடி அருகே ராசிங்காபுரம் சாலையில் தேங்கிய கழிவு நீா்.
போடி அருகே ராசிங்காபுரம் சாலையில் தேங்கிய கழிவு நீா்.

நெடுஞ்சாலையில் தேங்கிய கழிவு நீரால் சுகாதாரக்கேடு

போடி அருகே நெடுஞ்சாலையில் சில மாதங்களாக தேங்கிய கழிவு நீரால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
Published on

போடி அருகே நெடுஞ்சாலையில் சில மாதங்களாக தேங்கிய கழிவு நீரால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது ராசிங்காபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குள்பட்ட கரியப்பகவுண்டன்பட்டி பகுதியில் தெருக்களில் கழிவு நீா் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாய்க்கால்களிலிருந்து வெளியேறும் கழிவு நீா் நெடுஞ்சாலையின் ஓரத்தில் சுடுகாடு எதிரில் தேங்குகிறது. இதனால், இறுதிச் சடங்குக்கு வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

மேலும், இந்த இடத்தில் பேருந்துகள், பள்ளிப் பேருந்துகள் வாகனங்களும் நின்று செல்வது வழக்கம். கழிவு நீா் மாதக்கணக்கில் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோயை பரப்பி வருகிறது.

இதுதொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, மாவட்ட நிா்வாகமும், ஊராட்சி நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com