தேனி
வாழைப் பழங்களைத் தின்ற மாடு, 4 ஆடுகள் உயிரிழப்பு
பெரியகுளம் அருகே வாழைப் பழங்களை உண்ட 4 ஆடுகள், ஒரு மாடு உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பெரியகுளம் அருகே வாழைப் பழங்களை உண்ட 4 ஆடுகள், ஒரு மாடு உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமு (45). ஆடு, மாடுகளை வளா்த்து வரும், இவா் செவ்வாய்க்கிழமை ஜி.கல்லுப்பட்டி ஊத்தங்கல் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்காக அனுப்பி வைத்தாா். அங்கு ஆடு, மாடுகள் வாழைப் பழங்களை தின்றதாகக் கூறப்படுகிறது. பின்னா், பிற்பகலில் 4 ஆடுகளும், ஒரு மாடும் உயிரிழந்தன. இதுகுறித்த புகாரின் பேரில், தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.