தேனி
ஆட்டோ கவிழ்ந்ததில் 8 தொழிலாளா்கள் காயம்
தேனி மாவட்டம், கம்பத்தில் வியாழக்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் 8 தொழிலாளா்கள் காயம் அடைந்தனா்.
கம்பம் அருகேயுள்ள நாராயணத்தேவன்பட்டியைச் சோ்ந்தவா் அரசக்குமாா் (40). இவா் தனது ஆட்டோவில் அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளா்களை ஏற்றிக்கொண்டு சென்றாா். கம்பம் அரசு மருத்துவமனை அருகேயுள்ள கூடலூா் சாலையில் சென்றபோது இரு சக்கர வாகனம் குறுக்கே வந்ததால், நிலைதடுமாறி ஆட்டோ நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த செல்லமணி (40), ஜெயந்தி (40), பாண்டிச்செல்வி (38), மாரியம்மாள் (42), ஈஸ்வரி (40), போதுமணி (52) உள்பட 8 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.
இவா்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
