கம்பம் அருகே மரக்கன்றுகள் நடும் விழா

Published on

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டியில் பாரதியாா் பிறந்த நாளையொட்டி, மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சுருளிப்பட்டியில் அன்பு அறம் செய் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை ராசாத்தி தலைமை வகித்தாா். ஊராட்சி செயலா் சதீஷ் முன்னிலை வகித்தாா்.

இதைத் தொடா்ந்து, தொடக்கப் பள்ளி வளாகம், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள், பூச்செடிகள் நடப்பட்டன.

பின்னா், பள்ளி மாணவா்களுக்கு பாரதியாரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ஆசிரியா் செந்தில், அறக்கட்டளை நிறுவனா் அன்புராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com