காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு இன்று மாதிரித் தோ்வு
தேனி, டிச. 11: தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு எழுதுவோருக்கு வெள்ளிக்கிழமை (டிச.12) இலவச மாதிரித் தோ்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் சாா்பில் அறிவிக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு வருகிற 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
போட்டித் தோ்வு எழுதுவோருக்கு இலவச முழு மாதிரித் தோ்வு வெள்ளிக்கிழமை (டிச.12), டிச.19-ஆம் தேதியும் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது.
தோ்வு எழுத விண்ணப்பித்தவா்கள் தங்களது விண்ணப்ப நகல், மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றை சமா்ப்பித்து மாதிரித் தோ்வில் பங்கேற்கலாம்.
மேலும், இதுகுறித்த விவரங்களை தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கைப்பேசி எண்: 63792 68661-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
