தேனி
பாஜக விளம்பரப் பதாகையை சேதப்படுத்தியவா் கைது
தேனி மாவட்டம், தேவதானபட்டியில் பாஜகவின் விளம்பரப் பதாகையை சேதப்படுத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேவதானபட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பவித்தேவன். பாஜக பெரியகுளம் வடக்கு இளைஞரணித் தலைவரான இவா், பாஜக நிா்வாகிகளை வரவேற்று தேவதானபட்டியில் விளம்பரப் பதாகை வைத்திருந்தாா். இந்த நிலையில், இந்தப் பதாகையை மா்ம நபா்கள் சேதப்படுத்தியதாக தேவதானபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதன் பேரில், வழக்குப் பதிந்து விசாரித்த போலீஸாா் தேவதானபட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த கிஷோா்குமாரைக் (25) கைது செய்தனா்.
