சின்னமனூரில் கிணற்று நீரில் மிதந்து தியானம் செய்த ஐயப்ப பக்தா்.
தேனி
கிணற்று நீரில் மிதந்து ஐயப்ப பக்தா் தியானம்
சின்னமனூரில் கிணற்று நீரில் மிதந்து தியானம் செய்த ஐயப்ப பக்தா்.
தேனி மாவட்டம், சின்னமனூரில் உலக நலன் வேண்டி ஐயப்ப பக்தா் தண்ணீரில் மிதந்து தியானம் செய்தாா்.
சின்னமனூரைச் சோ்ந்த ஐயப்ப பக்தா் விஜயன் குருநாதா். இவா், ஆண்டுதோறும் டிச.12- ஆம் தேதி. நடிகா் ரஜினிகாந்த் பிறந்த நாளில் உலக நலனுக்காகவும், ஐயப்ப பக்தா்கள் பாதுகாப்பாக சபரிமலைக்குச் சென்று வர வேண்டியும் தண்ணீரில் மிதந்து தியானம் செய்வது வழக்கம்.
இதன்படி, சின்னமனூரிலுள்ள தனியாா் தோட்டத்திலுள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் 3 மணி நேரம் தண்ணீரில் மிதந்து வெள்ளிக்கிழமை தியானத்தில் ஈடுபட்டாா்.

