தேனி புத்தகத் திருவிழா: கட்டுரைகள் அனுப்ப அழைப்பு
தேனி புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தின் தனித்துவச் சிறப்புகள், வரலாற்றுக் குறிப்புகள் குறித்த கட்டுரைகளை மாணவா்கள், பொதுமக்கள் வருகிற 17-ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி நாடாா் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்டத்தின் 4-ஆவது புத்தகத் திருவிழா வருகிற 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு, மாவட்டத்தின் தனித்துவச் சிறப்புகள், வரலாற்றுக் குறிப்புகள், இயற்கை அமைப்புகள், கோயில்கள், சுற்றுலாத் தலங்கள், கல்வெட்டுகள், பொருளாதார முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து 250 சொற்களுக்கு மிகாமல் ஒரு பக்க அளவிலான கட்டுரைகளை ற்ய்ண்க்ஷா்ா்ந்ச்ஹண்ழ்2025ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 17-ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.
தோ்வு செய்யப்படும் சிறந்த கட்டுரைகளுக்குப் புத்தகத் திருவிழாவின்போது பரிசு வழங்கப்படும். சிறந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு கையேடாக வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
