தொழிலாளியை மிரட்டிய மற்றொரு இளைஞா் கைது

Published on

போடியில் வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி தொழிலாளியை மிரட்டிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடி ஜமீன் தோப்பு தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் கௌதம் (23). கௌதம் மீது பல வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளன. இவரை ஒரு வழக்கில் காட்டிக் கொடுத்ததாக, அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரனை (33) கல்லால் தாக்கிக் காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்து கௌதம் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தியும், பிரபாகரன் சட்டைப் பையில் பணத்தை எடுக்க முயன்றதோடு, அவருக்கு கௌதம் கொலை மிரட்டலும் விடுத்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் கௌதம் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com