தேனி
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
தேனி அல்லிநகரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக மளிகைக் கடை உரிமையாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேனி அல்லிநகரம், அம்பேத்கா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் வேல்முருகன் (40). இவா், அதே பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வேல்முருகனை சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், கடையிலிருந்த ஒரு கிலோ 171 கிராம் எடையுள்ள புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
