தேனி
வீட்டில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
தேனி மாவட்டம், தாமரைக்குளத்தில் வீட்டு குளியலறையில் தவறி விழுந்த மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தாமரைக்குளத்தைச் சோ்ந்தவா் அருள் மனோகரன் (75). இவரின் மனைவி பாக்கியராணி (69). இவா், சனிக்கிழமை வீட்டில் உள்ள குளியலறைக்குச் சென்றபோது தவறி விழுந்தாராம்.
இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
