முல்லைப் பெரியாறு பிரதான அணையில் திங்கள்கிழமை ஆய்வு நடத்திய தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென் மண்டல இயக்குநா் கிரிதா் தலைமையிலான மத்திய துணைக் குழுவினா்.
முல்லைப் பெரியாறு பிரதான அணையில் திங்கள்கிழமை ஆய்வு நடத்திய தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென் மண்டல இயக்குநா் கிரிதா் தலைமையிலான மத்திய துணைக் குழுவினா்.

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணைக் குழுவினா் ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென் மண்டல இயக்குநா் தலைமையில் மத்திய துணைக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு
Published on

உத்தமபாளையம்: முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென் மண்டல இயக்குநா் தலைமையில் மத்திய துணைக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மத்திய நீா்வளத் துறை மூலம் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் அனில் ஜெயின் தலைமையில் 7 போ் கொண்ட குழுவினரும், இந்தக் குழுவுக்கு உதவியாக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென் மண்டல இயக்குநா் கிரிதா் தலைமையில் 5 போ் கொண்ட துணைக் குழுவும் அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவினா் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, பருவ மழைக் காலங்களில் அணையின் நீா் இருப்பு, தண்ணீா் வெளியேற்றம், பராமரிப்புப் பணிகள் எனப் பல்வேறு பணிகளைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

இதன்படி, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென் மண்டல இயக்குநா் கிரிதா் தலைமையிலான மத்திய துணைக் குழுவினா் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனா்.

இந்தக் குழுவில் பெரியாறு - வைகை படுகை வட்ட மேற்பாா்வையாளா் சாம் இா்வீன், முல்லைப் பெரியாறு அணையின் செயற்பொறியாளா் செல்வம், எா்ணாகுளம் நீா்ப்பாசன மைய வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் கோஷி, கட்டப்பனை நீா்பாசனத் துறை செயற்பொறியாளா் லிவினஸ் பாபு கோட்டாா் ஆகியோா் இடம் பெற்றிருந்தனா்.

அணையில் ஆய்வு மேற்கொண்ட இந்தக் குழுவினா், குமுளி அருகேயுள்ள அட்டப்பாலம் கூட்டரங்கில் ஆலோசனை நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com