தேனி
நீதிமன்ற ஆவணங்களைப் புகைப்படம் எடுத்ததாக புகாா்: போலீஸாா் விசாரணை
தேனி மாவட்ட நீதிமன்ற ஆவணங்களை அனுமதியின்றி புகைப்படம் எடுத்தவரிடம் போலீஸாா் விசாரணை
தேனி மாவட்ட நீதிமன்ற ஆவணங்களை அனுமதியின்றி புகைப்படம் எடுத்தவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தேனி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணியாற்றி வருபவா் மகாலட்சுமி. இவா் தேனி நீதிமன்ற தலைமை எழுத்தா் அறைக்கு திங்கள்கிழமை சென்றாராம். அப்போது, அங்கு ஒருவா் அசல் கோப்புகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாராம்.
இதுகுறித்து அவரிடம் விசாரித்ததில், மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சோ்ந்த காதா்மீரான் (37) என்றும், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தலைமை எழுத்தாளராகப் பணிபுரிந்து வருவதாகவும் கூறி, அடையாள அட்டையைக் காண்பித்தாராம். அதை ஆய்வு செய்த போது, போலியானது என்பது தெரியவந்தது.
இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
