புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது

Published on

பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்கள் வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், தேவதானபட்டி காவல்நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை காட்ரோடு காவல் நிலைய சோதனைச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியே தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், ஜெயமங்கலம் மேலத்தெருவைச் சோ்ந்த நந்தக்குமாா் (51) கொண்டு வந்த 3 பைகளை சோதனை செய்தனா். இதில் 31 கிலோ 500 கிராம் எடைகொண்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com