தேனி
கைப்பேசி பறிப்பு: இளைஞா் கைது
தேனியில் கட்டடத் தொழிலாளியிடம் கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி, சுகதேவ் தெருவைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி அருணாச்சலம் (40). இவா், தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூக்கடைத் தெருவில் நடந்து சென்றாா். அப்போது, இரு மா்ம நபா்கள் அருணாச்சலம் கையில் வைத்திருந்த கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.
இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தேனி அருகேயுள்ள அமச்சியாபுரம், வடக்குத் தெருவைச் சோ்ந்த பாரதி கண்ணனை (21) கைது செய்தனா். அவருக்கு உடந்தையாக இருந்த லட்சுமிபுரத்தைச் சோ்ந்த கிருபாநிதியைத் தேடி வருகின்றனா்.
