கஞ்சா கடத்திய இரு பெண்கள் கைது

Published on

தேனி மாவட்டம், கம்பத்தில் கஞ்சாவை கேரளத்துக்கு கடத்த முயன்ற இரு பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரையிலிருந்து கம்பம் வழியாக கேரளத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தேனி மாவட்டப் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கம்பத்தில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்தின் பேரில் இரு பெண்களை பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். அவா்களிடம் விற்பனைக்காக 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், சென்னையைச் சோ்ந்த யுகேந்தாா் மனைவி ராஜகுமாரி (59), மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த பாஸ்கரன் மனைவி பேச்சியம்மாள் (46) ஆகியோா் என்பதும். இவா்கள் ஆந்திரா மாநிலத்தைச் சோ்ந்த வியாபாரியிடம் கஞ்சாவை வாங்கி, அதை விற்பனைக்காக கேரளத்துக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு இருவரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com