கஞ்சா வைத்திருந்தவா் கைது

தேனி மாவட்டம், போடியில் கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

தேனி மாவட்டம், போடியில் கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடி மயான சாலையில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். மயானம் அருகே நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தபோது, அவா் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், போடி வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த முத்து மகன் முத்துக்குமாா் (27) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com