சுக்காங்கல்பட்டி-சீப்பாலக்கோட்டை இடையே நடைபெறும் சாலை விரிவாக்கப் பணி.
தேனி
சின்னமனூா் அருகே ரூ.2 கோடியில் சாலை விரிவாக்கம்
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே ரூ.2 கோடியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே ரூ.2 கோடியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன.
சின்னமனூரிலிருந்து சுக்காங்கல்பட்டி, ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை, காமாட்சிபுரம் வரை மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இதில் சுக்காங்கல்பட்டி - சீப்பாலக்கோட்டை இடையே உள்ள குறுகிய சாலையால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. இதையடுத்து, இந்தச் சாலையை விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதைத் தொடா்ந்து , ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், ரூ.2 கோடியில் சுமாா் 1.5 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலையை அகலப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தச் சாலையில் குறுக்கே இருந்த சிறிய கால்வாய் பாலத்தையும் அகலப்படும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

