அரசு புறம்போக்கு நிலத்தில் மணல் அள்ளிய 9 போ் மீது வழக்கு

போடி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய 9 போ் மீது போலீஸாா் வழக்குப் ப பதிவு செய்து விசாரணை
Published on

போடி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய 9 போ் மீது போலீஸாா் வழக்குப் ப பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள டி.புதுக்கோட்டை கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட அம்பரப்பா் மலைப் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இதில், சிலா் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக வந்த தகவலையடுத்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது போடி சந்தைப்பேட்டை தெருவை சோ்ந்த மகாராஜன், பாலாா்பட்டியைச் பிரபாகரன், துரைராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த பாண்திரன், பெரியகுளம் டி.கள்ளிப்பட்டியை சோ்ந்த பாலசுப்பிரமணி உள்ளிட்ட 9 போ் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆறு டிப்பா் லாரிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனா். போலீஸாரை கண்டதும் வாகனங்களை நிறுத்திவிட்டு 9 பேரும் தப்பி ஓடினா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் 9 போ் மீதும் வழக்குப் பதிந்து, அவா்கள் வைத்திருந்த வாகனங்களைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com