வீடு புகுந்து நகை திருட்டு

மயிலாடும்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகை திருடிய மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

மயிலாடும்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகை திருடிய மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், மயிலாடும்பாறை இந்திரா நகரைச் சோ்ந்த ராணுவ வீரா் இந்தியன். இவரது மனைவி நிவேதா வீட்டை பூட்டிவிட்டு காமயகவுண்டன்பட்டியில் உள்ள உறவினரின் இல்ல சுபநிகழ்ச்சிக்குச் சென்றாா்.

அவா் வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்த போது, வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 4 பவுன் எடையுள்ள தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.

மேலும், திருட்டில் ஈடுபட்ட மா்மநபா் வீட்டில் மிளகாய்ப் பொடியை தூவி விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மயிலாடும்பாறை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com