ரயில்வே மேம்பாலப் பணி: ஆட்சியா் ஆய்வு

ரயில்வே மேம்பாலப் பணி: ஆட்சியா் ஆய்வு

போடியில் ரயில்வே மேம்பாட்டு பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.
Published on

போடியில் ரயில்வே மேம்பாட்டு பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

போடி நகராட்சியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ரூ.47.16 கோடியில் ரயில்வே கடவுப்பாதையின் குறுக்கே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. போடி வட்டம், அணைக்கரைப்பட்டி விலக்குப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை (திட்டங்கள்) சாா்பில் அணைக்கரைப்பட்டி விலக்கு முதல் தா்மத்துப்பட்டி வரை ரூ.36 கோடியில் 3.8 கி.மீ. தொலைவுக்கு புறவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் நேரில் பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com