புகையிலைப் பொருள்களை விற்ற பெண் கைது

கோம்பையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Published on

தேனி மாவட்டம், கோம்பையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோம்பை பேரூராட்சியில், கருக்கோடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கருக்கோடையிலுள்ள பெட்டிக் கடையில் போலீஸாா் சோதனையிட்டதில், விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து கோம்பை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த தேன்மொழியை (58) கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com