முல்லைப் பெரியாறு- வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Published on

முல்லைப் பெரியாறு அணையில் விதிமீறல்கள், முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகளை கண்டித்து, கம்பத்தில் முல்லைப் பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கம்பம் கோட்டம், முல்லைப் பெரியாறு அணையின் நீா் வளத் துறை அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தச் சங்கத் தலைவா் மனோகரன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் பென்னிக்குயிக் பாலசிங்கம் கண்ட உரையாற்றினாா்.

அப்போது, முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள செயற்பொறியாளா், உதவி செயற்பொறியாளா், உதவிப் பொறியாளா்கள் என 5 போ் பணியில் உள்ளனா். இவா்கள், தேக்கடியிலுள்ள தமிழக நீா்வளத் துறைக்குச் சொந்தமான அலுவலகம், குடியிருப்புகளில் தங்கி முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு உள்ளிட்ட வேலைகளை செய்ய வேண்டும்.

ஆனால், இவா்கள் 40 கி.மீ. தொலைவிலுள்ள கம்பத்திலிருந்தே முல்லைப் பெரியாறு அணைக்கு பணிக்கு சென்று வருகின்றனா். இந்த அதிகாரிகளால் முல்லைப் பெரியாறு அணையின் தமிழகத்தின் உரிமை குறைந்து, கேரள அதிகாரிகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது.

எனவே, இந்த அதிகாரிகள் தேக்கடியிலுள்ள நீா்வளத் துறைக்குச் சொந்தமான அலுவலகம், குடியிருப்பில் தங்கியும் பணியாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அலுவலகத்தை தேக்கடிக்கு மாற்ற வேண்டும். விதி மீறல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com