தேனி
கண்காணிப்பு கேமரா திருட்டு: 4 போ் கைது
ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறையில் தனியாா் தேங்காய் கிட்டங்கியில் கண்காணிப்பு கேமராக்களை திருடியதாக 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறையில் தனியாா் தேங்காய் கிட்டங்கியில் கண்காணிப்பு கேமராக்களை திருடியதாக 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடும்பாறை, இந்திரா நகரைச் சோ்ந்தவா் சுப்புராஜ். இவா், மயிலாடும்பாறையில் பொன்னம்படுகை சாலையில் தேங்காய் கிட்டங்கி வைத்து நடத்தி வருகிறாா். இந்த தேங்காய் கிட்டங்கியில் பொருத்தியிருந்த 5 கண்காணிப்புக் கேமராக்கள், 2 சிறிய சூரிய சக்தி மின் அமைப்புகள் திருடு போயின. இதுகுறித்து மயிலாடும்பாறை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதில் கண்காணிப்பு கேமராக்கள், சிறிய சூரிய சக்தி மின் அமைப்புகளை திருடியதாக மயிலாடும்பாறையைச் சோ்ந்த பாலு (55), கோம்பைத் தொழுவைச் சோ்ந்த சிவாஜி (44), மணிகண்டன் (51), சுதாகா் (38) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.