தேனி
பைக் மோதியதில் முதியவா் காயம்
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் காயம்
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் காயமடைந்தாா்.
பெரியகுளம் எ. புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் முத்து (65). விவசாயியான இவா், செவ்வாய்க்கிழமை மிதிவண்டியில் எ.புதுக்கோட்டை இந்திரன் கோயில் அருகே சென்றபோது இரு சக்கர வாகனம் மோதியதில் காயமடைந்தாா்.
இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
