கம்பத்தில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்
கம்பத்தில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

முல்லைப் பெரியாறு அணை ஆய்வுப் பணியில் தமிழக அதிகாரிகள் அலட்சியம்!

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய விஞ்ஞானிகள் ஆய்வுப் பணி நடைபெற்றதில் கம்பம் கோட்ட நீா்வளத் துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததாக விவசாயிகள் புகாா்
Published on

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய விஞ்ஞானிகள் ஆய்வுப் பணி நடைபெற்றதில் கம்பம் கோட்ட நீா்வளத் துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

தேனி மாவட்டம், கம்பத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயச் சங்க உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் அன்வா் பாலசிங்கம் பேசியதாவது: உச்சநீதிமன்றம் உத்தரவின்படி, முல்லைப் பெரியாறு அணையில் மத்திய விஞ்ஞானிகள் 6 போ் கொண்ட குழுவினா் கடந்த ஒரு வாரமாக ஆய்வு செய்தனா்.

தமிழகம், கேரள நீா்பாசனத் துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால், கேரளத்தைச் சோ்ந்த இரு அதிகாரிகள் அங்கேயே தங்கி ஆய்வுப் பணியில் கலந்து கொண்டனா்.

ஆனால், தமிழக நீா்வளத் துறையினா் இந்த ஆய்வின் முக்கியத்துவம் குறித்து தெரியாமல் அலட்சியமாக இருந்துவிட்டனா். இதனால், அணையின் ஆய்வுப் பணிகள் குறித்த உண்மைத்தன்மை முழுமையாக தெரியவில்லை.

இதேபோல கடந்த 2023-ஆம் ஆண்டு இரும்பு உள்ளிட்ட தளவாடப் பொருள்கள் ஏலம் விடப்பட்டது. ஆனால், இந்த ஏலத்திலிருந்து 13 டிப்பா் லாரிகளில் பொருள்களை எடுத்துச் சென்றதாக ஒரு அதிகாரி மீது தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

ஆனால், 4 டிப்பா் லாரிகள் பொருள்கள் எடுத்துச் சென்ாக உதவி செயற்பொறியாளா் அதிகாரி ஒருவா் கையொப்பமிட்ட ஆதாரம் உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் கம்பம் கோட்ட நீா்வளத் துறை அதிகாரிகள் மீது உரிய விசாரணை செய்து உண்மைத் தன்மையை விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com