முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணை ராணுவ படையை நியமிக்க வலியுறுத்தி, கம்பத்தில் சனிக்கிழமை பேரணியாக சென்ற விவசாய அமைப்பினா்.
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணை ராணுவ படையை நியமிக்க வலியுறுத்தி, கம்பத்தில் சனிக்கிழமை பேரணியாக சென்ற விவசாய அமைப்பினா்.

முல்லைப் பெரியாறு அணையில் ராணுவ படையை நியமிக்க வலியுறுத்தி கம்பத்தில் விவசாயிகள் அமைப்பினா் பேரணி

Published on

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணை ராணுவ படையை பாதுகாப்பு பணியில் நியமிக்க வலியுறுத்தி, கம்பத்தில் விவசாய அமைப்பினா் சனிக்கிழமை பேரணியாக செல்ல முயன்றனா். இவா்களை போலீஸாா் தடுத்தி நிறுத்தியதால் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முல்லைப் பெரியாறு அணைக்கு அடிக்கடி வெடி குண்டு மிரட்டல் விடப்படுகிறது. ஆனால், கேரள அரசு மிரட்டல் விடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. கேரள அரசும், அங்குள்ள சில தனியாா் தொண்டு நிறுவனங்களும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனா்.

எனவே, அணையில் மத்திய துணை ராணுவ படையை பாதுகாப்பு பணியில் நியமிக்க பெரியாறு-வைகை விவசாய பாசன சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

பேரணி தடுத்து நிறுத்தம்: கம்பம் காந்தி சிலையிலிருந்து குமுளியை நோக்கி தொடங்கிய பேரணிக்கு பெரியாறு-வைகை விவசாய பாசன சங்கத் தலைவா் மனோகரன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் பென்னிக்குவிக் முன்னிலை வகித்தாா்.

இந்தப் பேரணிக்கு அனுமதி இல்லாததால் கம்பம் பொதுப் பணித் துறை அலுவலம் முன் போலீஸாா் அவா்களைத் தடுத்தி நிறுத்தினா்.

ஆா்ப்பாட்டம்: இதைக் கண்டித்து, விவசாய அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில் கேரள அரசு பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன. இந்த அணை பாதுகாப்பு பணியில் கேரள போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் கேரளத்துக்கு ஆதரவாக உள்ளனா். எனவே, அணையில் மத்திய துணை ராணுவ படையை நியமிக்க வேண்டும். இந்த அணையை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழக விவசாய அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என முழக்கமிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com