ஆட்டோ கவிழ்ந்து 2 பெண்கள் காயம்

Published on

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் இரு பெண்கள் காயமடைந்தனா்.

பெரியகுளம் தாமரைக்குளம் தாசில்தாா்நகரைச் சோ்ந்தவா் செல்வராணி (26). தேனி நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தராகப் பணிபுரிந்து வரும் இவா் பெரியகுளத்தைச் சோ்ந்த தாரணியுடன் (28) சனிக்கிழமை ஆட்டோவில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா்.

பெரியகுளம் அழகா்சாமிபுரத்தைச் சோ்ந்த செந்தில் (41) ஆட்டோவை ஓட்டினாா். லட்சுமிபுரம் தனியாா் மண்டபம் அருகே சென்ற போது, ஆட்டோ நிலை தடுமாறிக் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த செல்வராணி, தாரணியை அருகிலிருந்தவா்கள் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com