மதுக் கூடத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த அய்யம்பட்டி கிராம மக்கள்.
மதுக் கூடத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த அய்யம்பட்டி கிராம மக்கள்.

மதுக் கூடத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் மனு

சின்னமனூா் அருகேயுள்ள அய்யம்பட்டியில் தனியாா் மனமகிழ் மன்றத்தின் பெயரில் மதுக் கூடம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனா்.
Published on

தேனி: சின்னமனூா் அருகேயுள்ள அய்யம்பட்டியில் தனியாா் மனமகிழ் மன்றத்தின் பெயரில் மதுக் கூடம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், அய்யம்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்கிடம் அளித்த மனு விபரம்:

அய்யம்பட்டியில் ஊராட்சி மேல்நிலை குடிநீா்த் தொட்டி அருகே தனியாா் மனமகிழ் மன்றம் பெயரில் மதுக் கூடம் அமைக்க கடந்த 2024, ஜூலை மாதம் பணிகள் நடைபெற்றன. கோயில், குடிநீா்த் தொட்டி, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்தப் பகுதியில் மதுக் கூடம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததையடுத்து, பணி நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அய்யம்பட்டியில் மனமகிழ் மன்றத்தின் பெயரில் மதுக் கூடம் அமைப்பதற்கு மீண்டும் பணிகள் நடைபெற்றன. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கடந்த மாா்ச் 4-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் சாா்பில் மனு அளித்திருந்தோம். இந்த நிலையில், தற்போது கலால் துறையிடம் அனுமதி பெற்று அய்யம்பட்டியில் மதுக் கூடம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அய்யம்பட்டியில் மதுக் கூடத்தால் பொதுமக்களுக்கு இடையூறும், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மதுக் கூடம் திறப்பதற்கு மாவட்ட நிா்வாகம் தடைவிதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com