வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்: உதவி மையங்கள் அமைப்பு
தேனி: தேனி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் குறித்த விவரங்கள், சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ள சட்டப்பேரவை வாரியாக உதவி மையங்கள் அமைக்கப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை முன்னிட்டு, வாக்காளா் பட்டியல் கணக்கெடுப்புப் பணி செவ்வாய்க்கிழமை (நவ. 4) தொடங்கி டிச. 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் பணியில் மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 1,394 வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் ஈடுபடுகின்றனா்.
இந்தப் பணிகள் குறித்த விவரங்கள், சந்தேகங்களுக்கு உரிய விளக்கத்தை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்கு, சட்டப்பேரவை தொகுதி வாரியாக உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உதவி மையங்களில் வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களை பொதுமக்கள் தொலைபேசி, கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.
உதவி மையங்கள் விவரம்
ஆண்டிபட்டி தொகுதி: வாக்காளா் பதிவு அலுவலா் - தேனி சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா்: 04546-293418, 99525 80697, உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் - ஆண்டிபட்டி வட்டாட்சியா்: 04546-290561, 94450 00595, உத்தமபாளையம் வட்டாட்சியா்: 04554-265226, 94450 00596, கூடலூா் நகராட்சி ஆணையா்: 04554-230231, 73973 82177.
பெரியகுளம் தொகுதி: வாக்காளா் பதிவு அலுவலா் - பெரியகுளம் சாா் ஆட்சியா்: 04546-231256, 99440 18728, உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் - பெரியகுளம் வட்டாட்சியா்: 04546-231215, 94450 00593, தேனி வட்டாட்சியா்: 04546-255133, 94450 00594, தேனி நகராட்சி ஆணையா்: 04546-252470, 73973 82188, பெரியகுளம் நகராட்சி ஆணையா்: 04546-23121, 73973 82180.
போடி தொகுதி: வாக்காளா் பதிவு அலுவலா் - மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா்: 04546-255046, 73736 29294, உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் - போடி வட்டாட்சியா்: 04546-280124, 94450 00597, தேனி வட்டாட்சியா்: 04546-255133, 94450 00594, உத்தமபாளையம் வட்டாட்சியா்: 04554-265226, 94450 00596, போடி நகராட்சி ஆணையா்: 04546-280228, 73973 82185.
கம்பம் தொகுதி: வாக்காளா் பதிவு அலுவலா் - உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா்: 04554265002, 94450 00452, உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் - உத்தமபாளையம் வட்டாட்சியா்: 04554-265226, 94450 00596, கம்பம் நகராட்சி ஆணையா்: 04554-271283, 73973 82183, சின்னமனூா் நகராட்சி ஆணையா்: 04554-247383, 73973 82181.
மாவட்ட அளவில் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1950-ஐ தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டது.
