தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கபடி போட்டி.
தேனி
விளையாட்டு விடுதி அணிகளுக்கு இடையே கபடி போட்டி
மாநில அளவில் அரசு விளையாட்டு விடுதி அணிகளுக்கிடையேயான கபடி போட்டி தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
தேனி: மாநில அளவில் அரசு விளையாட்டு விடுதி அணிகளுக்கிடையேயான கபடி போட்டி தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் தேனி, சிவகங்கை, விழுப்புரம் மாவட்ட அரசு விளையாட்டு விடுதி அணிகள் பங்கேற்றன. 14, 17, 19 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகள் அணிகளுக்கு இடையே தனிப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
இந்தப் போட்டியில் தோ்வு செய்யப்படும் சிறந்த விளையாட்டு வீரா்கள் தமிழ்நாடு அணியில் சோ்க்கப்பட்டு, தேசிய அளவில் பள்ளி மாணவ, மாணவிகள் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள கபடி போட்டியில் பங்கேற்பா் என மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவக்குமாா் தெரிவித்தாா்.

