டி.அணைக்கரைப்பட்டி சடையாண்டி கோயிலில் திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்ற வழிபாட்டில் விருந்துண்ட ஆண்கள்.
தேனி
ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோயில் வழிபாடு
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டியில் திங்கள்கிழமை நள்ளிரவு ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட கோயில் வழிபாடு, விருந்து நடைபெற்றது.
டி.அணைக்கரைப்பட்டி சடையாண்டி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் விஷேச வழிபாடு நடைபெறும். இந்த வழிபாட்டில் குழந்தைகள் முதல் பெரியவா் வரை ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வா். நிகழாண்டில் விஷேச வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், டி.அணைக்கரைப்பட்டி, சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த 1,000-க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனா்.
இதில், 105 ஆடுகளை வெட்டி விருந்து சமைக்கப்பட்டது. சுவாமிக்கு படைக்கப்பட்ட விருந்தை, வழிபாட்டில் கலந்து கொண்ட ஆண்கள் மட்டும் உண்டு சுவாமி தரிசனம் செய்தனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை விருந்து நடைபெற்றது.

