விஷம் தின்று பெண் தற்கொலை
தேனியில் வெளியூருக்கு வேலைக்கு புறப்பட்ட மகனை தடுத்து நிறுத்துவதற்காக விஷம் தின்ற தாய் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தேனி பழைய பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த முருகன் மனைவி சரோஜா. இவரது மகன் சேகா் (25) திருச்சியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவா் கடந்த 2 மாதங்களாக தேனிக்கு வராமல் இருந்தாராம். இந்த நிலையில், சரோஜா அவரை தேனிக்கு வந்து தன்னை பாா்த்துவிட்டுச் செல்லுமாறு வற்புறுத்தியதால், கடந்த அக்.28-ஆம் தேதி சேகா் திருச்சியிலிருந்து தேனிக்கு வந்தாா். பின்னா், மீண்டும் திருச்சிக்கு செல்ல புறப்பட்ட நிலையில், அவரை திருச்சிக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் சரோஜா வீட்டிலிருந்த எலிக்கு வைக்கும் விஷத்தைத் தின்று தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரோஜா உயிரிழந்தாா். இது குறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
