அன்னாபிஷேக அலங்காரத்தில் தாமரைக்குளம் மீனாட்சி சுந்தரேஸ்வா்.
அன்னாபிஷேக அலங்காரத்தில் தாமரைக்குளம் மீனாட்சி சுந்தரேஸ்வா்.

தாமரைக்குளம் மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்

Published on

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி, புதன்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது.

தாமரைக்குளத்தில் பழைமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி, புதன்கிழமை அதிகாலை கோயில் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, அம்மன், பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, மீனாட்சி சுந்தரேஸ்வருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் தாமரைக்குளம், வடகரை, பெரியகுளம், டி.கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com