உத்தமபாளையத்தில் நடைபெற்று வரும் புதிய  பேரூராட்சி கட்டுமானப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங், உடன், உதவி இயக்குநா், பேரூராட்சித் தலைவா், செயல் அலுவலா்.
உத்தமபாளையத்தில் நடைபெற்று வரும் புதிய பேரூராட்சி கட்டுமானப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங், உடன், உதவி இயக்குநா், பேரூராட்சித் தலைவா், செயல் அலுவலா்.

உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

Published on

தேனி மாவட்டம், உத்தமபாளையம், சின்னமனூா் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

உத்தமபாளையம் பேரூராட்சியில் மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.1.37 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டுமானப் பணிகளையும், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ், ரூ.29 கோடியில் குடிநீா் அபிவிருத்தி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, உதவி இயக்குநா் வில்லியம் ஜேசுதாஸ் (பேரூராட்சிகள்), பேரூராட்சித் தலைவா் முகமதுஅப்துல் காசிம், செயல் அலுவலா் சின்னச்சாமி பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சின்னமனூா் நகராட்சி அரசு மருத்துவமனையில் 15-ஆவது மானியத் திட்டத்தின் கீழ் ரூ.3.50 கோடியில் கூடுதல் அரசு மருத்துவமனைக் கட்டடம், பொன் நகா் நகராட்சிப் பள்ளியில் ரூ.74 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அப்போது, அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு நிா்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com