தனித்துவ அடையாள எண் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெறுவதற்கு வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்குவதற்கு வேளாண்மைத் துறை சாா்பில் அனைத்து கிராமங்களிலும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது நிலத்தின் சிட்டா, ஆதாா் அட்டை, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகியவற்றை சமா்பித்து, பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகளின் தனித்துவ அடையாள எண் வருவாய்த் துறையால் அங்கீகரிக்கப்படும்.
தனித்துவ அடையாள எண் பெற்ற விவசாயிகள் வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனைத் துறை, வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, ஊரக வளா்ச்சித் துறை ஆகியவற்றின் திட்டப் பயன்களை பெறுவதற்கு ஒவ்வொரு முறையும் நில ஆவணங்களை சமா்பிக்கத் தேவையில்லை.
மேலும், மாவட்டத்தில் பிரதமரின் கெளரவ உதவித் தொகை பெறும் 27,317 பயனாளிகளில், இதுவரை 21,454 போ் மட்டுமே தனித்துவ அடையாள எண் பெற்றுள்ளனா். இந்த விவசாயிகள் மட்டுமே தொடா்ந்து கெளரவ உதவித் தொகை பெற முடியும்.
எனவே, பிரதமரின் கெளரவ உதவித் தொகை, அரசு நலத் திட்ட உதவிகள் பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களில் தொடா்பு கொண்டு, உரிய ஆவணங்களை சமா்ப்பித்து தனித்துவ அடையாள எண் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
