நவ.8-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
கொடுவிலாா்பட்டியில் உள்ள தேனி கம்மவாா் சங்கம் கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்ககம் ஆகியவற்றின் சாா்பில், வருகிற 8-ஆம் தேதி காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்டத்துக்குள்பட்ட, வெளி மாவட்டங்களில் உள்ள பல்வேறு தனியாா் நிறுவனங்கள், திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
இந்த முகாமில் 8, 10, 12 வகுப்புகள், தொழில் பயிற்சி படிப்பு, பட்டயப் படிப்பு, செவிலியா் பயிற்சி படிப்பு, பட்டப் படிப்பு, பொறியியல் படிப்பு ஆகியவற்றில் தோ்ச்சி பெற்றவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ் நகல்கள், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விரும்புவோா் தங்களது விவரங்களை இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
