பைக் மோதியதில் 2 தூய்மைப் பணியாளா்கள் பலத்த காயம்
போடியில் புதன்கிழமை இரு சக்கர வாகன மோதியதில் பெண் தூய்மைப் பணியாளா்கள் இருவா் பலத்த காயமடைந்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையைச் சோ்ந்தவா் நாகஜோதி (35), செங்குளத்துபட்டியைச் சோ்ந்தவா் மகாலட்சுமி. இவா்கள் இருவரும் போடி அரசு மருத்துவமனையில் தற்காலிக தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், இருவரும் பணி முடிந்து செவ்வாய்க்கிழமை மாலை பேருந்தில் ஏறுவதற்காக நடந்து சென்றனா். போடி போஜன் பூங்கா அருகே சென்றபோது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் இவா்கள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த நாகஜோதி, மகாலட்சுமி ஆகியோா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த போடி நாட்டாண்மைக்காரா் தெருவைச் சோ்ந்த தங்கமணி (29) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
