டிராக்டரில் கற்களை எடுத்துச் சென்றவா் கைது

Published on

பெரியகுளம் அருகே டிராக்டரில் அனுமதியின்றி கற்களை எடுத்துச் சென்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலம் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பொம்மிநாயன்பட்டி - எ.வாடிபட்டி சாலையில் சென்ற டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டனா். அந்த டிராக்டரில் அனுமதியின்றி கற்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ஓட்டுநா் கருப்பசாமியை (49) கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com