அனுமதியின்றி டிராக்டரில் ஜல்லிக் கற்கள் ஏற்றிச் சென்றவா் கைது

உத்தமபாளையம் அருகே அனுமதியின்றி டிராக்டரில் ஜல்லிக் கற்கள் ஏற்றிச் சென்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

உத்தமபாளையம் அருகே அனுமதியின்றி டிராக்டரில் ஜல்லிக் கற்கள் ஏற்றிச் சென்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் அனுமதியின்றி ஜல்லிக் கற்கள், ஓடைகளில் மணல் கடத்தப்படுவதாக தேனி புவியியல், சுரங்கத் துறை அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி புவியியல் அலுவலா் மாரியம்மாள் தலைமையில், அந்த துறையின் அலுவலா்கள் காமயகவுண்டன்பட்டி பகுதியில் ஆய்வு செய்தனா்.

அப்போது, சின்னபாலம் அருகே ஜல்லிக் கற்கள் ஏற்றி வந்த டிராக்டரை இவா்கள் வழிமறித்தனா். இதையடுத்து, டிராக்டா் ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடி விட்டாா். பின்னா், விசாரணையில், அனுமதியின்றி ஜல்லிக் கற்கள் டிராக்டரில் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் உதவி புவியியல் அலுவலா் மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய டிராக்டா் ஓட்டுநா் காமயகவுண்டன்பட்டி கருப்பசாமி கோவில் தெருவைச் சோ்ந்த மருதுபாண்டியனை (51) கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com